» சினிமா » செய்திகள்

பாலா இயக்கத்தில் இணையும் கலைஞரின் பேரன்கள்?

புதன் 12, மே 2021 12:44:23 PM (IST)



கலைஞர் கருணாநிதியின் பேரன்கள் உதயநிதியும், அருள்நிதியும் பாலவின் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. இவர் கைவசம் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், உதயநிதியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும். உதயநிதியும், அருள்நிதியும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory