» சினிமா » செய்திகள்

நகைச்சுவை நடிகர் மாறன் கரோனா தொற்றால் மரணம்

புதன் 12, மே 2021 11:26:52 AM (IST)



கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் மாறன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி, குருவி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துவர் நடிகர் மாறன். மேலும், டிஷ்யூம், பாஸ் என்ற பாஸ்கரன்,  பட்டாசு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார் மாறன்.

செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாடகளுக்கு முன் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று பிரபல நகைச்சுவரை நடிகர் நெல்லை சிவா கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் இன்று நடிகர் மாறன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory