» சினிமா » செய்திகள்

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் பாடல் வெளியீடு தள்ளி வைப்பு

செவ்வாய் 11, மே 2021 4:18:49 PM (IST)



இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மறைவு காரணமாக மாநாடு படத்தின் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஒரு பாடலை ரம்ஜான் பண்டிகைக்கு வெளீயிட திட்டமிட்டிருந்தனர். இதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தன.

ஆனால் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மறைந்ததன் காரணமாகவும் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பார்வை வெளியீடும் கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory