» சினிமா » செய்திகள்
தனுஷ் நடித்த கர்ணன் திட்டமிட்டபடி 9ம் தேதி ரிலீஸ்!
திங்கள் 5, ஏப்ரல் 2021 12:30:58 PM (IST)
தனுஷ் நடித்த கர்ணன் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.

மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் கர்ணன் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று வெளியான கர்ணன் பட விளம்பரத்தில் வெளியீட்டுத் தேதியில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. நாளை மாலை 7.10 முதல் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ணன் படம் ஏப்ரல் 9 அன்று திட்டமிட்டபடி வெளியாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் கலவரம்: கர்ணன் படத் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:41:42 PM (IST)

நடிகர் செந்திலுக்கு கரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 11:45:06 AM (IST)

யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் முடிதிருத்துவோர் சங்கம் புகார்!
சனி 10, ஏப்ரல் 2021 10:28:47 AM (IST)

திட்டமிட்டபடி கர்ணன் வெளியீடு: தாணு உறுதி
வியாழன் 8, ஏப்ரல் 2021 4:12:43 PM (IST)

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்திற்கு தடை
புதன் 7, ஏப்ரல் 2021 4:45:04 PM (IST)

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது : சிவகார்த்திகேயன் வாழ்த்து
புதன் 7, ஏப்ரல் 2021 3:39:11 PM (IST)
