» சினிமா » செய்திகள்

நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை - கங்கணா

வியாழன் 25, மார்ச் 2021 12:19:11 PM (IST)நான் தெரிவித்த சில கருத்துகளுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை என நடிகை கங்கணா கூறினார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவி. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. மார்ச் 23 தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் இந்தி ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கங்கணா கூறியதாவது: நான் விமர்சிக்கும் நபர்களை மீண்டும் சந்திப்பதும் உரையாடுவதும் எனக்கு மிகவும் எளிதான ஒன்று. காரணம் என்னுடைய எண்ணங்கள் சரியாக இருக்கின்றன. எனினும் தங்களுடைய உரையாடலில் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்கும் நபர்களை மக்களுக்கு பிடிப்பதில்லை. சில நேரங்களில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும் எதிர்வினைகள் எனக்கு கிடைக்கின்றன. 

நம் மனதில் எந்தவித உள்நோக்கம் இல்லாமல், நாம் எதையும் நம் சுயலாபத்துக்காக செய்யாமல் இருந்தால் வெற்றி பெறுவது நாம் தான். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. நாட்டைப் பற்றியோ, நாட்டில் நிலவும் பிரச்சினைகள் பற்றியோ, விவசாயிகள் போராட்டம் என எதைப் பற்றி நான் பேசினாலும் உடனே எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படியல்ல, ஒரு சாதாரணக் குடிமகன் போலவே நான் சில கருத்துகளைத் தெரிவிக்கிறேன். அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை. இவ்வாறு கங்கணா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory