» சினிமா » செய்திகள்

தேசிய விருது: இமானுக்கு ரஜினி, விஜய், அஜித் வாழ்த்து!!

புதன் 24, மார்ச் 2021 5:36:39 PM (IST)

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமானுக்கு ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை  2019 ம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச் 22 ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் கோலிவுட்டை சேர்ந்த நடிகர் தனுஷ் உள்ளிட்ட 6 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது. விருது பெற்றவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் டி.இமானுக்கு ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் தனிப்பட்ட முறையில் போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இவர்கள் 3 பேரும் தன்னை போனில் அழைத்து வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சி என இமான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தனது திரையுலக இசை பயணத்தை தொடங்கியதையும் இமான் குறிப்பிட்டுள்ளார்.இவர்களிகளிடம் இருந்து கிடைத்த வாழ்த்தினை சிறப்பானதாகவும், அங்கீகாரமாகவும் கருதுவதாக இமான் குறிப்பிட்டுள்ளார். அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்காக தான் இமானுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கும் இமான் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக மறைந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இமான் இசையில் ஓப்பனிங் பாடல் ஒன்றை பாடி உள்ளார். இது தான் எஸ்பிபி கடைசியாக பாடிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory