» சினிமா » செய்திகள்

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!

வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் ஹீரோவாக நடித்துள்ள பிரெண்ட்ஷிப் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் - பிரண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஹர்பஜன் சிங்கின் மனைவியும் நடிகையுமான கீதா பஸ்ரா, ட்விட்டரில் கூறியதாவது:கதாநாயகனாக நடிக்க இன்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். உங்களின் இந்தப் பக்கத்தைப் பார்ப்பேன் என எப்போதும் எண்ணியதில்லை. படத்தைக் காண ஆவலாக உள்ளேன் என்றார். இதற்கு ஹர்பஜன் சிங் வேடிக்கையாகப் பதில் அளித்ததாவது: கதாநாயகியின் கணவர் கதாநாயகன் ஆவதற்கு அந்த வீட்டிலிருந்து தான் பயிற்சியைத் தொடங்கினார் என்றார்.


இந்தப் படம் மட்டுமல்லாமல் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா என்கிற படத்திலும் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். தமிழ் ட்வீட்கள் மூலம் சமூகவலைத்தளத்தில் தனக்கென்ன ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ்ப் படங்களில் இனி அடிக்கடி இடம்பெறப் போகிறார் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory