» சினிமா » செய்திகள்
சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)
விஷால் நடித்துள்ள சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷால் நடிப்பில், எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் சக்ரா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் பிப்.19-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சக்ரா படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது சக்ரா படத்தின் மீதான தடை நீக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் படம் திட்டமிட்டபடி நாளை 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் ரஜினியின் அண்ணாத்தே படப்பிடிப்பு?
வெள்ளி 5, மார்ச் 2021 12:18:47 PM (IST)

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!
வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)

இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 3:35:30 PM (IST)
