» சினிமா » செய்திகள்
ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: வலிமை அப்டேட் விவகாரத்தில் அஜித் வருத்தம்!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 11:45:44 AM (IST)
வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார்.

வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா, வலிமை படத்தின் பாடல்கள் பற்றி சமீபத்தில் தகவல் தெரிவித்தார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ட்விட்டரில் இன்று தெரிவித்ததாவது: வணக்கம். வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை முதல் பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடவுள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும் என்றார்.
இந்நிலையில் வலிமை அப்டேட் குறித்து நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: கடந்த சில நாள்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு, ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் ரஜினியின் அண்ணாத்தே படப்பிடிப்பு?
வெள்ளி 5, மார்ச் 2021 12:18:47 PM (IST)

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!
வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)

இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)
