» சினிமா » செய்திகள்

ரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65!!

புதன் 27, ஜனவரி 2021 3:46:46 PM (IST)

ரஜினியின் அண்ணாத்தே படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளால்,   விஜய் 65 ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவானது மாஸ்டர். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தப் படம் உருவாக இருக்கிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 2020ல் வெளியானது. 

விஜய் 65 படத்தை இந்த வருட தீபாவளிக்கே வெளியிடலாம் என திட்டமிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால், தற்பொழுது, ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளது. இரண்டு படங்களுமே சன்பிக்சர்ஸ் தான் தயாரித்துவருகிறது என்பதால் ஒரே நாளில் இரண்டு படங்களை நிச்சயம் வெளியிட மாட்டார்கள். அண்ணாத்த சென்ற வருடமே துவங்கிவிட்டது. இன்னும் 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. ரஜினியுடன் கலந்துபேசி படப்பிடிப்பை துவங்கவும் தயாராகிவருகிறதாம் படக்குழு. அதனால், ரஜினிக்காக விஜய் படம் தள்ளிப்போகிறது. 

அதோடு, பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பண்டிகையை குறிவைத்தே வெளியாகும். இந்த தீபாவளிக்கு மற்ற ஹீரோக்களின் படம் வெளியாவதாக அறிவிப்பு வருவதற்கு முன்பாக, அட்வான்ஸாக துண்டு போட்டுவிடவே தீபாவளி ரிலீஸை முன்கூட்டியே அறிவித்துவிட்டது சன்பிக்சர்ஸ். ரஜினி படமே வெளியாவதால் மற்ற ஹீரோக்களின் படங்கள் பின்வாங்கும். இந்தக் காரணத்துக்காக தான், முடியாத படத்துக்கு முதல் ஆளாக அறிவிப்பு விட்டிருக்கிறார்கள். ஆக, ரஜினி படம் தீபாவளிக்கு வருவதால், மாஸ்டர் ரிலீஸ் போல விஜய்யின் அடுத்தப் படமான விஜய் 65 படமும் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory