» சினிமா » செய்திகள்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜன.29ல் ஓடிடி-யில் ரிலீஸ்

புதன் 27, ஜனவரி 2021 12:01:38 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" வருகிற 19ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறது.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த மாஸ்டர் படம் தள்ளிப்போனது. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால், திரையரங்குகள் களையிழந்து காணப்பட்டன.

அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ரிலீசான படம் தான் மாஸ்டர். பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற ஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அன்றைய தினம், இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory