» சினிமா » செய்திகள்

ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று தேர்வு

புதன் 27, ஜனவரி 2021 10:20:12 AM (IST)

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கேற்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கேற்கிறது. இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியானது. கொரோனா காரணமாக ஓ.டி.டி.யில் வெளியான படங்களும் ஆஸ்கார் போட்டியில் பங்கேற்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஆஸ்கார் போட்டிக்கான பொதுப்பிரிவில் சூரரைப்போற்று படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.

இதில் தேர்வாகி இறுதி போட்டியில் பங்கேற்க வேண்டும். அதிலும் தேர்வானால் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெறும். பின்னர் ஆஸ்கார் மேடையில் வெற்றி பெற்றதை அறிவிப்பார்கள். ஆஸ்காருக்கு செல்லும் சூரரைப்போற்று படத்தை பொதுப்பிரிவு போட்டியில் திரையிடுவதற்காக ஆஸ்கார் அகாடமி திரையில் பதிவேற்றம் செய்துள்ளனர். அங்கு ஆஸ்கார் விருது உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்த பிரிவுகளில் போட்டியிட படத்தை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்வார்கள். ஏற்கனவே இந்த படம் கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடலுக்கும் தேர்வானது நினைவுகூரத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory