» சினிமா » செய்திகள்
நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
புதன் 6, ஜனவரி 2021 12:05:50 PM (IST)
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹேம்நாத்தும், சித்ராவும் ஏற்கெனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியா் அலுவலகத்தில் சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, அண்ணண் சரவணன் ஆகியோரிடமும், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாயாா் வசந்தா ஆகியோரிடமும், ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தினாா்.
சித்ராவின் உதவியாளா் ஆனந்திடம் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, விசாரணை முடிவுக்கு வந்தது. இதனிடையே, சித்ரா மரணம் தொடர்பான வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு (சிபிசிஐ) மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் விஜயா மனு செய்திருந்தார். இந்நிலையில், சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்தும், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65!!
புதன் 27, ஜனவரி 2021 3:46:46 PM (IST)

அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வரை சந்திக்கவில்லை - நடிகர் விவேக் விளக்கம்
புதன் 27, ஜனவரி 2021 12:04:24 PM (IST)

விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜன.29ல் ஓடிடி-யில் ரிலீஸ்
புதன் 27, ஜனவரி 2021 12:01:38 PM (IST)

ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று தேர்வு
புதன் 27, ஜனவரி 2021 10:20:12 AM (IST)

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)
