» சினிமா » செய்திகள்

சித்ரா மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை: முதலமைச்சர் தனிப்பிரிவில் பெற்றோர் மனு!

புதன் 30, டிசம்பர் 2020 4:39:14 PM (IST)

நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, முதலமைச்சர் தனிப்பிரிவில் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார், கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் RDOவும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், சித்ராவின் பெற்றோர், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory