» சினிமா » செய்திகள்

மத்திய அரசு விருது: ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு

புதன் 21, அக்டோபர் 2020 12:34:03 PM (IST)



மத்திய அரசு விருதுகளுக்கு தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு (சைஸ் நம்பர் 7.) என்ற படத்தை இயக்கி இருந்தார். 

அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது. இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திரைப்படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory