» சினிமா » செய்திகள்

விஜய் சேதுபதி என் வேடத்தில் நடிப்பதைக் கெளரவமாக எண்ணுகிறேன்: முத்தையா முரளிதரன்

செவ்வாய் 13, அக்டோபர் 2020 4:27:22 PM (IST)

விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகர் என் வேடத்தில் நடிப்பதைக் கெளரவமாக எண்ணுகிறேன் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விஜய் சேதுபதி முன்பு பேட்டியளித்ததாவது: தமிழ் இனத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர், முரளிதரன். உலகம் முழுக்கத் தன் முத்திரையைப் பதித்துள்ளார். முரளிதரனாக நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆனால் அந்த வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்தப் படத்தில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவுள்ளார் முரளிதரன். கிரிக்கெட் தொடர்பான விவரங்களில் எனக்கு ஆலோசனகள் சொல்லவுள்ளார் என்றார். விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகர் என் வேடத்தில் நடிப்பதைக் கெளரவமாக எண்ணுகிறேன். படப்பிடிப்பு முடியும்வரை இப்படத்துடன் என்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறேன் என்று முரளிதரன் கூறினார். 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும். சிஎஸ்கே - ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory