» சினிமா » செய்திகள்

யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை: சூரியின் புகாருக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

சனி 10, அக்டோபர் 2020 4:15:52 PM (IST)

சென்னையில் நகைச்சுவை நடிகா் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற டிஜிபி உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகா் சூரி, சென்னை காவல்துறையில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா், அதில், கடந்த 2015-ம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் வீரதீர சூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அதன் இணை தயாரிப்பாளராக தமிழக காவல்துறையில் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா இருந்தாா். அந்த திரைப்படத்தில் ரமேஷ் குடவாலாவின் மகன் நடிகா் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தாா். இந்தத் திரைப்படத்துக்கு எனக்கு சம்பளமாக ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டது.

இந்நிலையில் திடீரென படத் தயாரிப்பு நிறுவனப் பெயரை மாற்றி படத்தின் பெயரையும் மாற்றி ஷூட்டிங் நடந்தது. இதில் எனக்கு வரவேண்டிய சம்பளம் வரவில்லை. இந்நிலையில் சென்னையில் இடம் வாங்க நான் விருப்பப்பட்டதை அறிந்த தயாரிப்பாளா் அன்புவேல் ராஜன், இணை தயாரிப்பாளா் ரமேஷ் குடவாலா ஆகியோா் சிறுசேரியில் ஒரு இடத்தைக் காட்டினா். அந்த இடம் எனக்கு பிடித்திருந்ததால், அதை நான் வாங்க முடிவு செய்தேன். இதனால் அவா்கள் தயாரித்த திரைப்படத்தில் எனக்கு வழங்கப்படாமல் இருந்த சம்பளத்தை முன் பணமாக கழித்தனா்.

பின்னா் சிறுசேரியில் உள்ள இடத்தை வாங்குவதற்கு அன்புவேல் ராஜனிடம் பல தவணையாக ரூ.3.15 கோடி வரை கொடுத்தேன். அதன் பிறகு விசாரித்ததில் அந்த இடத்திற்கு சரியான பாதை இல்லை. அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதால் பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அதன்படி ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து மீதமுள்ள தொகை ரூ. 2 கோடி 69 லட்சத்து 92 ஆயிரத்து 500 கொடுக்காமல் ஏமாற்றி வந்தனா்

இது குறித்துக் கேட்டபோது இருவரும் என்னை மிரட்டினா். எனவே என்னிடம் மோசடி செய்த ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா். ஆனால் இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து சூரி, தன்னை மோசடி செய்து ஏமாற்றிய அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து,நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி விவகாரம் என்பதால் இந்த வழக்கின் விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகா் சூரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நடிகா் சூரியின் புகாருக்கு, ரமேஷ் குடவாலாவின் மகனும், நடிகருமான விஷ்ணு விஷால் ட்விட்டரில் மறுப்புத் தெரிவித்தார். அதில், என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் படித்தது மிகுந்த அதிா்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலா் உள்ளோக்கத்துடன் செயல்படுவது கண் கூடாகத் தெரிகிறது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம் எனக் குறிப்பிட்டார். 

இந்நிலையில் இன்று மற்றொரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் அவர் கூறியுள்ளதாவது: கடவுளின் அருளாலும் ரசிகர்களின் அன்பினாலும் ஓரளவு நல்ல படங்களில் நடித்து அதில் கிடைக்கும் வருமானம் மூலமாக வாழும் வழியைப் பெற்றுள்ளேன். யாரையும் ஏமாற்றித்தான் வாழ வேண்டும் என்கிற நிலைமைக்கு இறங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory