» சினிமா » செய்திகள்

நடிகர் சூரியிடம் ரூ.2¾ கோடி மோசடி : திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு

வெள்ளி 9, அக்டோபர் 2020 11:59:28 AM (IST)

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி, "வீர தீர சூரன்" என்ற படத்தில் நடித்ததற்காக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்,  ரூ.40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். 

சம்பள பாக்கியை தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் அவர் ரூ. 2.70 கோடி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அன்புவேல் ராஜன், மற்றும் ரமேஷ் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory