» சினிமா » செய்திகள்

திருமணமான இரண்டே வாரத்தில் கணவர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை!

புதன் 23, செப்டம்பர் 2020 4:22:19 PM (IST)திருமணமான இரண்டே வாரத்தில் பாலியல் புகார் கூறி கணவரை, பிரபல நடிகை போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர் பூனம் பாண்டே.   கடந்த செப்டம்பர் 10-ந் தேதி பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. 

திருமண புகைப்படங்களை வெளியிட்டு  ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார். கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் கோவா போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். திருமணமாகி 2 வாரமே ஆன நிலையில், காதல் கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 24, 2020 - 12:51:20 PM | Posted IP 162.1*****

அவன் என்னவெல்லாம் நினைச்சு வந்தானோ. அதான் காஞ்ச மாடு பாய்ஞ்ச மாதிரி பாய்ஞ்சு இருப்பான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory