» சினிமா » செய்திகள்

கமல் - லோகேஷ் கனகராஜ் படத் தலைப்பு : படக்குழு மறுப்பு

வியாழன் 17, செப்டம்பர் 2020 5:45:45 PM (IST)



கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று (செப்டம்பர் 16) வெளியானது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் நாயகனாக நடிக்கவுள்ளார். கமல் நடிப்பில் உருவாகும் 232-வது படமாக இது அமைந்துள்ளது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகும்போதே எவனென்று நினைத்தாய் என்பதுதான் தலைப்பு எனத் தகவல் வெளியானது. இது தொடர்பாகப் படக்குழுவினர் அமைதி காத்தனர். நேற்று படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் கூட, படத் தலைப்பு குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை. ஆனால், லோகேஷ் கனகராஜ் படம் தொடர்பாக ட்வீட் செய்யும்போது எவனென்று நினைத்தாய் என்று குறிப்பிட்டு இருந்தார். உடனடியாக இதுதான் தலைப்பு என்று பலரும் குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வந்தனர். இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இன்னும் படத்துக்கு எந்தவொரு தலைப்புமே இறுதி செய்யவில்லை என்றும், நடிகர்கள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எல்லாம் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டனர். இப்போதைக்கு கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி படத்தின் இசையமைப்பாளராக அனிருத் மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory