» சினிமா » செய்திகள்

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை சிவகார்த்திகேயன் ஏற்பு!

வெள்ளி 11, செப்டம்பர் 2020 5:12:44 PM (IST)

நடிகர் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகா் வடிவேல் பாலாஜி (42) மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது சிரிச்சா போச்சு பகுதியில் வடிவேல் பாலாஜி பங்கேற்றுள்ளார். இருவரும் கூட்டணி அமைத்து நகைச்சுவை வெடிகளை அள்ளி வீசியதால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்கள். 

தன்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த வடிவேல் பாலாஜியின் மரணம் சிவகார்த்திகேயனை உலுக்கியுள்ளது. இதனால் வடிவேல் பாலாஜியின் இரு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாகக் கூறியுள்ளார். இதைப் பற்றி சிவகார்த்திகேயன் முறையாக அறிவிக்கவில்லையென்றாலும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினரிடம் இத்தகவலைக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே சென்னை சேத்துப்பட்டில் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

DURAISep 24, 2020 - 10:24:29 AM | Posted IP 162.1*****

THANK YOU SIVAKARTHIKEYEN

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory