» சினிமா » செய்திகள்

நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்: ரசிகர்கள் - சின்னத்திரை பிரபலங்கள் கடும் அதிர்ச்சி!!

வியாழன் 10, செப்டம்பர் 2020 4:16:55 PM (IST)

நடிகர் வடிவேல் பாலாஜி-யின் திடீர் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சின்னதிரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி (வயது 42). நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகளான அது இது எது, கலக்கப் போவது யாரு, கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். தலைநகரம் வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு, இவர் செய்த காமெடி சின்னத்திரையில் மிகவும் பிரபலம்.

சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடர்ந்து, சில படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கரோனா ஊரடங்கு சமயத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் கூட பங்கேற்றார் வடிவேல் பாலாஜி. சுமார் 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய கை, கால்களும் செயல் இழந்தது. இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால், அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 10) காலை காலமானார். அவருக்கு வயது 42. அவருக்கு 1 மகனும், மகளும் இருக்கிறார்கள். வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory