» சினிமா » செய்திகள்

வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ்!!

செவ்வாய் 28, ஜூலை 2020 5:35:22 PM (IST)

தன்னையும், தனது கணவரையும் அவதூறாக பேசியதாக நடிகை வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதாவை பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

இவர்கள் மீது வடபழனி காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். பின்னர் சூர்யாதேவி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலின்போது, வனிதா விஜயகுமார் என்னையும் எனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். 

என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான், அந்த சேனலை தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, நானும், எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமாருக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன்படி, வடபழனி மகளிர் காவல்நிலையம், வடபழனி துணை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் நோட்டீசின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory