» சினிமா » செய்திகள்

திரைத்துறை, சினத்திரை பணிகளுக்கு நாளை முதல் அனுமதி!

செவ்வாய் 7, ஜூலை 2020 12:26:38 PM (IST)

இந்தியன் 2, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் நாளை முதல் தொடங்குகின்றன.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19ஆம் தேதியிலிருந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் இத்துறையைச் சார்ந்தோருக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீண்ட பேச்சுவார்த்தைப் பிறகு தமிழக அரசு இறுதிகட்டப் பணிகளுக்கும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அனுமதி கிடைத்தது. அப்போது சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதில், தமிழக அரசு 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்க அனுமதியளித்தது.

சென்னையில் அதிகரித்து வரும் கரோனாவின் தீவிரத்தால், மீண்டும் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் எப்போது சின்னத்திரை படப்பிடிப்பு, சினிமா பணிகள் தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி சில நாட்கள் முன் ஆடியோ பதிவொன்றை வெளியிட்டார். அதில், ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு பழைய தளர்வுகள் நடைமுறையில் இருக்கும் எனும் அரசு அறிவித்துள்ள நிலையில், புதிய அனுமதிக்கான தேவை இருக்காது. ஜூலை 8ஆம் தேதி முதல் மீண்டும் பணிகளை துவங்க நாம் தயாராகலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பழைய அனுமதியுடன் சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் திரைப்பட இறுதிக்கட்ட பணிகள் நாளை(ஜூலை 8) முதல் மீண்டும் தொடங்கப்படுகின்றன. இதில், கமல்ஹாசனின் இந்தியன் 2, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் நாளை தொடங்க ஃபெப்சி அனுமதி அளித்துள்ளது. பழைய அனுமதியின் பெயரிலேயே அரசின் நிபந்தனைகளை தீவிரமாக கடைபிடித்து இந்தப் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory