» சினிமா » செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஞாயிறு 5, ஜூலை 2020 6:02:40 PM (IST)

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory