» சினிமா » செய்திகள்

நான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்

புதன் 13, மே 2020 12:38:50 PM (IST)

"நான் கைதாகவில்லை; வீட்டில் நலமுடன் உள்ளேன்" என நடிகை பூணம் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், காரணமின்றி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றியதற்காக பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் பூணம் பாண்டே இத்தகவலை அடியோடு மறுத்துள்ளார்.

இதுபற்றி சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்ததாவது: நேற்று முதல் தொடர்ச்சியாகப் படங்களைப் பார்த்து வருகிறேன். அடுத்தடுத்து மூன்று படங்களைப் பார்த்தேன். ஆனால் நேற்றிரவு முதல் எனக்குத் தொலைப்பேசி அழைப்புகள் விடாது வருகின்றன. நான் கைதானதாக வெளியான செய்திகள் குறித்து விசாரிக்கிறார்கள். இதைச் செய்தியில் நானும் பார்த்தேன். என்னைப் பற்றி எழுதவேண்டாம். நான் வீட்டில் நலமுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory