» சினிமா » செய்திகள்

52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்

திங்கள் 11, மே 2020 3:48:45 PM (IST)

52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு, இந்தியன் 2 உட்பட சில படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்று முதல் தொடங்கின.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. மார்ச் 19-ம் தேதி பெப்சி அமைப்பு இதனை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரை, சின்னத்திரை என எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது. 

சில தினங்களுக்கு முன்பு தொழில்துறையினருக்கு மட்டும், நிபந்தனைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள், தமிழக அரசுக்கு இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மட்டும் அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைப் பரிசிலீத்த தமிழக அரசு, இன்று (மே 11) முதல் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது. ஆகையால் 52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு தமிழ் சினிமா பணிகள் இன்று (மே 11) முதல் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்தியன் 2 படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. ராங்கி படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள், கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் சின்னத்திரை தொடர்களின் டப்பிங் பணிகள் ஆகியவை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியுடன் 5 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory