» சினிமா » செய்திகள்

மதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்: கஸ்தூரி கண்டனம்

புதன் 6, மே 2020 4:36:39 PM (IST)

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசு செய்வது தவறு. நாடு முழுவதும் நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது கடையை திறக்க துணிகிறீர்கள். குடி, கரோனா இரண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும்போது மூடிவிட்டு இப்போது அதிகமாகும்போது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகி விடும். கடையில் வாங்கும் மதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory