» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன் எழுதிய கரோனா விழிப்புணர்வு பாடல்: சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடினர்

வியாழன் 23, ஏப்ரல் 2020 8:45:29 AM (IST)

கரோனா விழிப்புணர்வு பாடல்களை திரையுலகினர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் கமல்ஹாசன் கரோனா விழிப்புணர்வுக்காக பாடல் ஒன்றை எழுதி உள்ளார். 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை சுருதிஹாசன், யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா, பாம்பே ஜெயஸ்ரீ, அனிருத், சித்தார்த், முகென், லிடியன், சித் ஸ்ரீராம், தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் பாடி உள்ளனர். இந்த பாடல் வரிகள் வருமாறு: "பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே. தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே. அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை, அடாத துயர்வரினும் விடாது வென்றிடுவோம். அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்முலகு. அதில் நீரே பெருமளவு நாம் அதிலும் சிறிதளவே.

சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. உலகிலும் பெரியது உம், அகம் வாழ் அன்புதான்.. உலகிலும் பெரியது நம், அகம் வாழ் அன்புதான்.. புதுக்கண்டம், புது நாடு என வென்றார் பல மன்னர். அவர், எந்நாளும் எய்தாததை சிலர் பண்பால், உள்ளன்பால் உடன்வாழ்ந்து, உயிர் நீத்து, அதன் பின்னாலும் சாகாத உணர்வாகி உயிராகிறார். அழிவின்றி வாழ்வது நம் அறிவும், அன்புமே! சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே!" இவ்வாறு கமல்ஹாசன் பாடலை எழுதி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory