» சினிமா » செய்திகள்

கரோனா நிவாரணப் பணிகளுக்காக விஜய் ரூ,1.30 கோடி நிதியுதவி

புதன் 22, ஏப்ரல் 2020 4:55:15 PM (IST)

கரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்காக, தமிழகம், கேரளம், உள்ளிட்ட மாநிலங்களுக்கு மொத்தமாக விஜய் 1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும், பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கும் திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இதில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் மட்டுமே எந்தவொரு நிதியுதவியும் வழங்காமல் இருந்தார். 

இது பெரும் சர்ச்சையாகவே இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய்யும் தன் தரப்பிலிருந்து நிதியுதவியை அறிவித்துள்ளார்.  1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் விஜய். இதில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், பெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என அறிவித்துள்ளார் விஜய். இவை போக, ஒரு தொகையை தனது நற்பணி மன்றங்களுக்கு அனுப்பிவைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவும் உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளார் விஜய்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory