» சினிமா » செய்திகள்

பெப்சி தொழிலாளர்களுக்கு கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி!

செவ்வாய் 21, ஏப்ரல் 2020 5:26:10 PM (IST)

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள  பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார். இந்நிலையில், பெப்சி தொழிலாளர்களுக்கும் தலைவி படத்தின் தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் நடிகை கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் இதுவரை ஒரே ஒரு தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2008-ல் வெளியான தாம்தூம் படத்தில் அவர் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் தலைவி திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். இப்படம் ஜூன் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory