» சினிமா » செய்திகள்

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி

வெள்ளி 10, ஏப்ரல் 2020 3:45:46 PM (IST)

கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி ராகவலா லாரன்ஸ் தெரிவித்ததாவது: சந்திரமுகி 2 படத்துக்காக சன் டிவி எனக்கு வழங்கிய முன்தொகையிலிருந்து ரூ. 3 கோடி கரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறேன். அதில் ரூ. 50 லட்சத்தை பிரதமர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 50 லட்சத்தை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 50 லட்சத்தை பெப்சி திரைப்படத் தொழிலாளர் அமைப்புக்கும் வழங்குகிறேன். 

மேலும் ரூ. 50 லட்சத்தை நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கும் ரூ. 25 லட்சத்தை எனது மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 75 லட்சத்தை அன்றாடப் பணியாளர்கள் மற்றும் எனது பகுதியான ராயபுரம் தேசியநகரில் உள்ள ஏழைகளுக்கும் வழங்குகிறேன் என்று கூறியுள்ளார். கரோனா நிவாரண நிதிக்குப் பிரபல தமிழ் நடிகர்கள் பலரும் இதுவரை நிதியுதவி அளித்துள்ளார்கள். அவர்களில் ராகவா லாரன்ஸ் தான் அதிகபட்ச தொகையை அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory