» சினிமா » செய்திகள்

கரோனா வைரஸ் பாதிப்பு: பிரபல காமெடி நடிகர் மரணம்!

செவ்வாய் 31, மார்ச் 2020 10:52:08 AM (IST)

கரோனா வைரஸ் காரணமாக ஜப்பானின் பிரபல காமெடி நடிகர் கென் ஷிமுரா உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் வென்று உயிர் பிழைத்தாலும், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பல்வேறு பிரபலங்களும், அரச குடும்பத்து வாரிசுகளும்கூட இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பது சாமானிய மக்களின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. மக்கள் தனித்து இருப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வைரஸின் காரணமாக ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா உயிரிழந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20ஆம் தேதி இவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி அவருக்கு கரோனாவுடன் கடுமையான நிமோனியாவும் இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

தி ட்ரிஃப்டர்ஸ் எனப்படும் ஜப்பானின் பிரபல ராக் பேண்ட் மற்றும் காமெடி குழுவில் இணைந்து பல நிகழ்ச்சிகளை கென் ஷிமுரா நடத்திவந்தார். பாஹா டொனோஸாமா மற்றும் ஹென்னா ஓஜிஸான் போன்ற 1980களின் பிரபல நிகழ்ச்சிகள் வாயிலாக பெரும் ரசிகர்களைச் சம்பாதித்தார். டோக்கியோவை அடுத்துள்ள ஹிகஸிமிராயமா என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது கடைசி காலம் வரை மக்களைத் தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தார். இந்த மரணச் செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணத்துக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory