» சினிமா » செய்திகள்

தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்

சனி 28, மார்ச் 2020 10:23:21 AM (IST)

தயவு செய்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நடிகா் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா். தற்போது நடிகா் வடிவேலுவும் கண்ணீா்மல்க பேசி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் பேசியிருப்பதாவது: மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்கிறேன்.  தயவு செய்து எல்லாரும் அரசாங்கம் சொல்கிற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள். மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கிறது. தன் உயிரைப் பணயம் வைத்து பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

காவல்துறையினா் நம்மைக் காவல் காத்து ”பாதுகாப்பாக இருங்கள், தயவு செய்து வெளியே வராதீா்கள் என்று கும்பிடும் அளவுக்கு இருக்கிறது. யாருக்காக இல்லையோ நம் சந்ததியினருக்காக, நம் வம்சாவளிக்காக, நம்ம உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும். தயவுசெய்து யாரும் வெளியே போகாதீா்கள். அசால்ட்டாக இருக்காதீா்கள். ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. தயவுசெய்து வெளியே வராதீா்கள் என்று வடிவேலு கண்ணீா்மல்க பேசியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory