» சினிமா » செய்திகள்

தனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க! – வைரமுத்து டுவீட்

சனி 21, மார்ச் 2020 3:53:04 PM (IST)

தனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க என  கவிஞர்வைரமுத்து டுவீட்டரில் பதவிட்டுள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து  பரவிய கொரோனா வைரஸ், இத்தாலி, ஈரான், எகிப்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட நாடுகளுக்கு மிக வேகமாகப் பரவியது. ஆனால், நேற்று, சீன அரசு, சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்திருந்தது. 

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். அதனால் இந்தியாவில் பாதிக்கப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இதில், 23 பேர் குணமடைந்துள்ளனர். மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. 

இந்நிலையில், மக்கள் தங்களை தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நம்மைக் காத்தல்; நாடு காத்தல். இரு அறைகூவல் எதிரே. தனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க" என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory