» சினிமா » செய்திகள்

சிரஞ்சீவி படத்திலிருந்து த்ரிஷா விலகல்

சனி 14, மார்ச் 2020 4:57:30 PM (IST)

பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடித்துவந்த நடிகை த்ரிஷா, கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

தெலுங்கின் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்துவந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தான் அந்தப்படத்தில் இருந்து விலகுவதாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், "சில சமயங்களில் ஆரம்பத்தில் சொல்வது ஒன்று பின்னர் நடப்பது வேறொன்றாக இருக்கிறது. படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நான் சிரஞ்சீவி சார் படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என அன்பான தெலுங்கு ரசிகர்களுக்கு - உங்களை வேறு ஒரு சிறந்த படம் மூலமாக விரைவில் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப்பதிவு த்ரிஷா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. த்ரிஷா அந்த படத்தில் இருந்து விலகியதால் மற்ற சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory