» சினிமா » செய்திகள்

வேட்டையாடு விளையாடு 2: கமல் - கவுதம் மேனன் மீண்டும் இணைகிறார்கள்?

புதன் 11, மார்ச் 2020 11:38:44 AM (IST)

வேட்டையாடு விளையாடு படத்தின் 2ஆம் பாகத்தை கவுதம் மேனன் இயக்க, கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் "வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ‘பார்த்த முதல் நாளே’ ‘நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே‘ ஆகிய பாடல்கள் வரவேற்பை பெற்றது. 

நல்ல வசூலுடன் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனை இயக்குனர் கவுதம் மேனன் சந்தித்து பேசினார். அப்போது வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

மெய்யன்Mar 11, 2020 - 10:36:24 PM | Posted IP 173.2*****

Apa Indian 2, Thalaivan Irukkiran, Sabashu Naidu oda vaazhkai lam ena aahuradhu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory