» சினிமா » செய்திகள்

மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் விசாரணை

புதன் 11, மார்ச் 2020 11:30:51 AM (IST)

மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம். அதில் நடிகர் விஜய் வங்கிக்கணக்கில் லலித்குமார் என்பவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகை ‘மாஸ்டர்’ படத்துக்காக பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே அதுகுறித்து லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது’, என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory