» சினிமா » செய்திகள்

பா. இரஞ்சித் படத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா!

வியாழன் 20, பிப்ரவரி 2020 5:40:47 PM (IST)பா. இரஞ்சித் இயக்கும் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் ஆர்யா.

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கி பிரபலமான பா. ரஞ்சித்துக்கு, ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார்.  ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு, தேசிய அளவில் பிரபலம் கிடைத்தது. காலா படத்தைத் தொடர்ந்து, இந்திய போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் இயக்கப் போவதாக அறிவித்த பா. ரஞ்சித், அதன் ஆரம்ப பணிகளை கவனித்து வருகிறார். 

தற்போது, நடிகர் ஆர்யா - பா. ரஞ்சித் காம்போவில் உருவாக உள்ள இந்த படத்திற்கு சல்பேட்டா பரம்பரை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆர்யாவின் மீகாமன், அருண் விஜய்யின் தடம் படத்தை இயக்கிய வெற்றி இயக்குநர் மகிழ் திருமேனி, இந்த படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் பாக்ஸிங் படத்திற்காகத் தான் நடிகர் ஆர்யா இப்படி ஒரு சிக்ஸ்பேக்கை வைத்துள்ளார். கட்டுக்கோப்பான அவரது உடற்கட்டு மூலம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory