» சினிமா » செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)

பிரபல ஹாலிவுட் நடிகர் ரான் லீப்மேன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. 

பிரபல ஹாலிவுட் நடிகர் ரான் லீப்மேன். இவர் ஸ்லாட்டர் ஹவுஸ்-5, செவன் ஹவர்ஸ் டு ஜட்ஜ்மென்ட், வயர் இஸ் போப்பா, தி சூப்பர் காப்ஸ், பிரண்ட்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான எம்மி விருதுகளும் வாங்கி உள்ளார்.

நியூயார்க்கில் வசித்து வந்த ரான் லீப்மேனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. மறைந்த ரான் லீப்மேன் ஏற்கனவே நடிகை லிண்டா லாவினை மணந்து விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ஜெசிக்கா வால்டரை 2-வது திருமணம் செய்து கொண்டார். ரான் லீப்மேன் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory