» சினிமா » செய்திகள்

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்!

சனி 7, டிசம்பர் 2019 4:03:17 PM (IST)

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த்- பிரேமலதா தம்பதிக்கு விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவரான விஜய பிரபாகரன் சென்னை ஸ்மேசர்ஸ் என்னும் அணியின் உரிமையாளராவார். தொழில் நிறுவனம் நடத்திவருவதோடு, சமீபகாலமாக தேமுதிகவின் அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டுவருகிறார். விரைவில் தேமுதிகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய பிரபாகரனுக்கும் கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இவர்களுக்கு நிச்சயதார்த்த விழா நேற்று கோவையில் நடைபெற்றது. இதற்காக சென்னையிலிருந்து பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ், சண்முகப்பாண்டியன் ஆகியோர் நேற்று கோவை சென்றனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. உடல்நலக் குறைவால் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் நீண்ட தூரப் பயணங்கள் தற்போது மேற்கொள்வதில்லை. இதனால் விஜயகாந்தை சிரமப்படுத்த வேண்டாம் என்பதற்காக குடும்பத்தினர் மட்டுமே சென்றுள்ளனர். விரைவில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்களை அழைத்து வெகு விமரிசையாக இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory