» சினிமா » செய்திகள்

டிச.7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா: லைகா நிறுவனம் அறிவிப்பு

வியாழன் 5, டிசம்பர் 2019 10:24:39 AM (IST)டிச.7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது.  
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் "சும்மா கிழி" என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் யூடியூபில் வெளியாகியது. அனிருத் மற்றும் எஸ்.பி பாலசுப்ரமணியம் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இசை வரும் டிச.7ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி முதல் பிரம்மாண்டமாய் நடைபெறவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்குள் #DarbarAudioLaunch என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory