» சினிமா » செய்திகள்

ரஜினியின் தலைவர் 168 படத்தில் மீனா ஒப்பந்தம்

புதன் 4, டிசம்பர் 2019 3:43:11 PM (IST)

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தர்பார் பணிகளை முடித்து விட்டதால், சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதில் சூரி நடிக்கவுள்ளதை சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மீதமுள்ள நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், இன்னும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும். இதனிடையே, இந்தப் படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை விரைவில் முறையாக அறிவிக்கவுள்ளார்கள். ரஜினி - மீனா ஜோடி எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் நடித்துள்ளது. அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாகும். இதில் முத்து படம் ஜப்பான் நாட்டில் மிகவும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அங்கு இந்தப் படத்தின் வசூலை பாகுபலி படத்தால் கூடிய முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரஜினியுடன் மீனா குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது. தற்போதைக்கு தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தலைவர் 168 என அழைத்து வருகிறது. மேலும், தனது படங்களின் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் ஆகியோரை இந்தப் படத்திலும் பயன்படுத்த சிவா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory