» சினிமா » செய்திகள்

முதன்முறையாக ரஜினி படத்திற்கு இமான் இசை!!

வியாழன் 14, நவம்பர் 2019 10:28:22 AM (IST)

சிவா இயக்கத்தில் ரஜினி படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தை முடித்துவிட்டார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு தர்பார் வெளியாகவுள்ளது. ஆனால், இதற்கு முன்னதாகவே ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, சிவா இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, சன் பிக்சர்ஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஜினி படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் டி.இமான்.

ரஜினி - சிவா இணையும் படத்தில், சூரியும் நடிக்கவுள்ளார். ஆனால், படக்குழு இன்னும் இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், தனது படங்களின் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் ஆகியோரை இந்தப் படத்திலும் உபயோகப்படுத்த சிவா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தொடர்பான அறிவிப்பு இந்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory