» சினிமா » செய்திகள்

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்

செவ்வாய் 29, அக்டோபர் 2019 4:12:00 PM (IST)

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தை சுஜித் 80 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை சுஜித்தின் மரண செய்தியை அறிந்த பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் சமூகவலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், குழந்தை சுஜித்தின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், "சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory