» சினிமா » செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

செவ்வாய் 29, அக்டோபர் 2019 4:05:24 PM (IST)

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 26), சென்னையில் உள்ள காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ‘நடிகா் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சற்று நேரத்தில் வெடித்துச் சிதற இருக்கிறது’என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பனையூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் உள்ள விஜய்யின் வீடுகளுக்குச் சென்று வெடிகுண்டு இருக்கிறதா என நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் விஜய்யின் பங்களாவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே போன்று சென்னை சாலிகிராமம் எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள நடிகா் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் வீட்டிற்குச் சென்று காவலர்கள் விசாரணை மேற்கொண்டனா். அந்த சோதனைகளில் வெடிகுண்டு எதுவும் சிக்காததைத் தொடர்ந்து அந்தத் தகவல் போலியானது என்று தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சைபா் குற்றப்பிரிவு போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். அந்த விசாரணையில் சென்னை போரூா் அருகேயுள்ள ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory