» சினிமா » செய்திகள்

தர்பார் தீம் இசை நவம்பர் 7ல் வெளியீடு: அனிருத் தகவல்

புதன் 16, அக்டோபர் 2019 11:37:36 AM (IST)

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் தீம் இசை நவம்பர் 7ல் வெளியீடப்படும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார். இந்நிலையில் நவம்பர் 7 அன்று தர்பார் படத்தின் தீம் இசையும் படத்தின் விடியோ போஸ்டரும் வெளியிடப்படும் என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால் தர்பார் படத்தின் இசை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory