» சினிமா » செய்திகள்

விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி : விஜய் சேதுபதி

புதன் 2, அக்டோபர் 2019 5:26:20 PM (IST)விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று டுவிட்டரில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மாதவனுடன் விக்ரம் வேதா படத்திலும், சிம்பு, அரவிந்தசாமி, அருண் விஜய்யுடன் செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக வந்தார். மலையாளத்தில் மார்கோனி மாதை படத்தில் ஜெயராமுடனும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். 

இதையடுத்து விஜய்யின் 64-வது படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வந்தனர். அவரும் சம்மதித்துள்ளார்.இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று டுவிட்டரில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய்க்கு வில்லனா? நண்பனா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இதில் விஜய் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் ராமேசுவரத்தில் தொடங்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது குழுவினருடன் சென்று படப்பிடிப்பு நடக்கும் இடங்களை நேரில் பார்த்து வருகிறார். வெளிநாட்டில் ஓய்வெடுக்க சென்ற விஜய்யும் சென்னை திரும்பி இருக்கிறார். விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory