» சினிமா » செய்திகள்

காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர்!

புதன் 17, ஜூலை 2019 5:20:29 PM (IST)சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, உட்பட பலர் நடித்துள்ள படம் காப்பான். இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். ஆகஸ்ட் 30 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் காப்பான் படப் பாடல், வரும் ஜூலை 21 அன்று வெளியிடப்படுகிறது. 

இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  வரும் ஞாயிறு, மாலை 6 மணிக்கு - சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ள பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். இதுதவிர சூர்யா, ஆர்யா, கேவி ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துகொள்கிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory