» சினிமா » செய்திகள்

நடிகை ரஞ்சிதா புகார் எதிரொலி: பிக் பாஸ் வீட்டில் உள்ள மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்!

புதன் 3, ஜூலை 2019 12:42:35 PM (IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை மீரா மிதுன், காவல் விசாரணைக்கு ஆஜராக வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

விஜய் டி.வி.யில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உள்ளது. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில் ரூ. 50,000 பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக நடிகை ரஞ்சிதா கொடுத்த புகாரின் பேரில் கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளார்கள். விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதால் நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு நேரில் ஆஜராக உள்ளதாக மீரா மிதுன் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory